பதிவுகள்

சித்திரங்கள்

தத்துவங்கள்

From our Blog

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

ஹிந்துக்களே ஆபத்து !

Tamil Hindu 01-04-18
Tamil hindu 01-04-18

ஹிந்துக்களே ஆபத்து !


ஹிந்துக்களே உங்களுக்கு ஆபத்து முஸ்லிம்களால் , கிறித்துவர்களால் , கம்யூனிஸ்ட்களால் , நாத்திகர்களால் என்று கேட்டு கேட்டு பாசிச வெறியேற்ற பட்ட உங்களுக்கு உங்களின் உண்மையான ஆபத்து எதுவென்று தெரியாமல் போயிருக்கலாம். செய்திகளின் பக்கங்கள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் செய்தி ஓன்று தான் நீ என்றுமே தாழ்த்தப்பட்டவன் நீ என்றுமே எங்களுக்கு அடிமை.

இவர்களின் சூழ்ச்சி அறியாமல் இவர்கள் வலையில் நீங்கள் விழலாம். ஆனால் உண்மையில் நிதர்சனம் எதுவென்று பாருங்கள்.

ஒரு மத்திய அமைச்சர் தலித்துகளை நாய் குறைப்பது போல் என்கிறார். பாஜக ஆளும் குஜராத்தில் குதிரையில் சென்றதற்காக ஒரு வாலிபன் கொல்லப்படுகிறான் .

ஒரு வேலை வடநாட்டில் அந்த வாலிபன் ஒரு முஸ்லிமால் கொல்லப்பட்டால் இந்நேரம் செய்திகள் எப்படி உலா வந்து இருக்கும்.அதற்கு முட்டு கொடுக்க பாசிசவாதிகள் தங்களின் லெட்டர் பேடுகளை கொடூர வார்த்தையால் அலங்கரித்து கொண்டு இருப்பார்கள். இந்துகளுக்காக போராடும் அமைப்புகள் நடத்தும் தலைவர்களோ இந்நேரம் பேரணிக்கு தாயாராக கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு இந்து ஒரு இந்துவால் கொல்லப்பட்டால் செய்தி எப்படி வருகிறது பார்த்தீர்களா ? உயர் சாதியினரால் கொல்லப்பட்டார் என்று அப்பம் அவர் இந்து இல்லையா ?

பாசிசவாதிகளால் ஒரு முஸ்லீம் , முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லப்படலாம். ஒரு கிறிஸ்துவன் , கிருஸ்துவன் என்பதால் கொல்லப்படலாம். ஆனால் ஒரு ஹிந்து , ஹிந்து என்பதால் கொல்லப்படமாட்டான் கீழ் சாதி என்பதால் கண்டிப்பாக கொல்லப்படுவான்.

அதை தான் சரித்திரம் எங்கும் கண்டுகொண்டிருக்கிறோம் .
பண்டைய இந்தியாவில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர். பிராமணர் அல்லாதார் உள்ளே சென்று உட்கார்ந்து சாப்பிட முடியாது. எடுப்புச் சாப்பாடுதான் வாங்கிச் சென்று வெளியே சாப்பிட வேண்டும். சென்னையில் அன்றைய மவுன்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில், ‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’ என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர். ரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இது மட்டுமல்ல. இருப்புப் பாதைகள் போடப்பட்டு, ரயில் பயணம் தொடங்கிய காலத்தில், நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை நான்கு வருணத்தாரும் தனித்தனியாகப் பயன்படுத்தும்படியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்து மத வேதியக் கூட்டம் ரயில்வே நிர்வாகத்தைக் கேட்கும் அளவுக்குப் பேதங்கள் மோசமாக இருந்தன.
தனது எல்லா பேட்டிகளிலும் SV சேகர் கூறுகிறார். எங்கேயாவது ஒரு பிராம்மணன் ஒரு கம்யூனல் கிளாஷ்க்கு காரணம்ன்னு சொல்ல முடியுமா ஒரு பிராமணன் மேல ஒரு FIR இருக்கா என்று கேட்கிறார்.

இந்த வார்த்தையை நீங்க திரும்ப திரும்ப கேட்ட உங்களுக்கே விளங்கும். எந்த கலவரத்திலேயும் அவர்கள் கைது ஆவதில்லை பிள்ளையார் ஊர்வலத்தில் முன்னே நின்னு கோஷம் போடுவதில்லை . அப்படி துவேஷ கோஷங்கள் போட்டு கலவரம் ஏற்பட்டு ஜெயிலுக்கு போறவன் யார் பிராமணனா ?அல்லது அப்பாவி இந்துக்களாகிய நீங்களா யோசித்து பாருங்கள் ?

ஆனால் அர்ஜுன் சம்பத் போன்றவர்களை பின்னால் இருந்து இயக்குபவர்கள் தயானந்த சரஸ்வதி போன்ற உயர் குலத்தோரே சென்ற ஆண்டு மாட்டை ஏற்றி சென்ற செந்தில் என்பவரை முஸ்லீம் என்று நினைத்து தாக்க சென்றவர்கள் யார் ?
மன்னார்குடி ஜீயர் இப்படி ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். ஹிந்துக்களே உங்களை நோக்கி இந்த பாசிசவாதிகளால் வந்து கொண்டிருக்கும் ஆபத்தை உணராமல் இவர்களிடம் நீங்கள் வீழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் . இவர்களின் சூழ்ச்சி தெரிந்தவர்கள் தப்பித்து கொள்கிறார்கள். இறுதியாக ஒன்றே ஓன்று தான் இந்துகளே உங்களுக்கு ஆபத்து ! முஸ்லிகளாலோ கிருஸ்துவர்களாலோ நாத்திகர்களாலோ இல்லை பிரமணியத்தினால் ... குறிப்பு : எல்லா பிராமணர்களும் கெட்டவர்கள் அல்ல. பிராமணிய கோட்பாட்டில் இந்த நாடு இயங்க வேண்டும் நாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்ட பாசிசவாதிகளால் மட்டுமே ஆபத்து.
- ஏர்வை ஹசன் நன்றி : தமிழ் இந்து நன்றி : பூங்குன்றன்






ஞாயிறு, 25 மார்ச், 2018

பெண்ணுரிமை




பெண்ணுரிமை 
------------------------
தலாக் தலாக் தலாக் இரண்டு மாதங்களுக்கு முன் எங்கு நோக்கினும் இது தான் சூடான விவாதம் , இஸ்லாம் மனைவிமார்களுக்கு அநிதம் இழைக்கிறது என்ற மாய தோற்றத்தை உருவாக்க முயன்றனர் .
இஸ்லாம் மனைவிக்கு கொடுக்கும் பாதுகாப்பு மற்றும் உரிமையை ஒரே ஒரு இஸ்லாமிய சட்டத்தின் மூலம் அழகாக சொல்லிவிடலாம் .
இஸ்லாமிய சட்டப்படி " திருமணம் ஆகாத ஒருவன் விபச்சாரம் செய்தால் 100 சவுக்கடி அதுவே திருமணம் ஆனவன் செய்தால் அவனுக்கு மரண தண்டனை "
இது தான் இஸ்லாம் . இந்தியாவிற்கு தேவை ரெட் லைட் ஏரியா அல்ல இஸ்லாமிய சட்டம்.
அறிக்கை விடும் அமைச்சர்கள் தங்கள் மாநிலத்தில் அரசாங்க அனுமதியுடன் அடுத்த பெண்ணின் கணவரை இன்னொருவளுக்கு கூட்டி கொடுக்கும் செயல்முறையை கைவிட்டுட்டு பிறகு பெண்களின் உரிமையை பற்றி பேசட்டும் ....
- அபுமுஜாஹித்

#ChapelHillShooting

நான் - VEG


நான் - VEG

-------------------------------------------------------------------------
நண்பர் : பாய் non-veg சாப்பிடறவங்களுக்கு சகிப்புத்தன்மை ரொம்ப குறைவாம் அப்படின்னு ஒரு article படிச்சேன் . 

ஓ அப்படியா ? இந்த வருசத்துல எத்தன கல்யாண வீடு போயிருபிங்க 

நண்பர் : ஒரு 3 கல்யாண வீடு attend பண்ணிருப்பேன்.

அதுல எத்தனை பாய் வீடு கல்யாணம் எத்தனை பாய் இல்லாத வீடு கல்யாணம் ?

நண்பர் : 2 பாய் வீடு

அப்பம் பாய் வீட்டு கல்யாணத்துல பிரியாணி வச்சு மாட்டி இருபிங்களே

நண்பர் :அட நீங்க வேற நான் சுத்த சைவம் பாய் .

அப்பம் பாய் வீட்ல என்ன சாப்பிட்டிங்க ?

நண்பர் : அதான் பாய் வீட்டு கல்யாணத்துல சைவ சாப்பாடு தனியா வச்சி இருந்தாங்களே.

ம்ம்.. அசைவம் சாப்பிடாதவங்களுக்கு தனியா சைவம் ஏற்பாடு பண்ணி இருந்தாங்க அப்பம் பாய் அல்லாத ஒரு கல்யாண வீட்டுக்கு போனிங்களே அங்க சைவம் சாப்பிடாதவங்களுக்கு தனியா அசைவம் ஏற்பாடு பண்ணி இருந்தாங்களா ?

நண்பர் : அது எப்படி சைவம் அசைவமும் ஒன்னா வைக்க முடியும் ?

ம் அப்பம் சகிப்புத்தன்மை யாருக்கு அதிகம் ? 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நவீன ஆடை

நவீன ஆடை
---------------------------------
அன்றைய ஆடை உடலை மறைக்க உதவியது
இன்றைய ஆடை உடலை காட்ட உதவுகிறது.

அலி பாயும் ஆட்டு குட்டியும்

ஊருக்கு போகும் போது நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் வந்த ஆங்கில கதையை பேசி கொண்டு இருக்கும் போது அதே கதையை ஊர் போய் திரும்பி வந்து தமிழில் கொஞ்சம் மாற்றம் செய்து போட்ட கதை இது.


அலி பாயும் ஆட்டு குட்டியும் 

--------------*****----------------------

அலி பாய் பார்க்க ரொம்ப அப்பாவியான மனுஷன் , பொண்டாட்டி எப்பம் பார்த்தாலும் கரிச்சி கொட்டிகிட்டே இருப்பா.

"இது லாம் ஒரு வீடா இங்க நிம்மதியா தூங்க கூட முடியல " இது தான் அலி பாய் பொண்டாட்டியின் மாமுல் பொலம்பல்.

மனுஷன் பொருத்து பொருத்து பார்த்து கடைசியா அந்த முஹல்லாஹ் ஆலிம்சாட்ட போய் தன் குறையை கொட்டி தீர்த்தார்.

எல்லா விசயத்தையும் பொறுமையா கேட்டுவிட்டு ஆலிம்சா கேட்டாரு உன் வீட்ல எத்தனை ஆடு இருக்கு இவரு சொன்னாரு 20 ஆடுன்னு , சரி அந்த இருபது ஆடையும் இரவு ஆனா உன் வீட்டுகுள்ள 40 நாள் அடைச்சி வை .

அலி பாயும் ஆலிம்சா சொன்ன மாதிரி இரவு ஆனா இருபது ஆட்டையும் வீட்ல அடைத்து வைத்தார்.
வழக்கத்தை விட இப்பம் பொண்டாட்டி பொலம்பல் இன்னும் அதிகமானது " மனுஷன் படுக்கவே இங்க இடம் இல்ல இதுல ஆடு வேறயா"

நாட்கள் ஆக ஆக பொலம்பல் கூடி கொண்டே போனது , மீண்டும் ஆலிம்சாவிடம் வந்து விசயத்தை சொன்னார் , ஆலிம்சா சொன்னார் 40 நாள் முடியட்டும் அப்புறம் ஆட்டை எல்லாம் வழக்கம் போல வெளிய விட்டுவிட்டு தூங்க செல் .

40 நாட்களும் கழிந்தது வழக்கம் போல ஆட்டை வெளியே கட்டிவிட்டு வீட்டில் உறங்க சென்றார் ,

மனைவி பெரும் மூச்சு விட்டு சொன்னாள் அப்பா இன்னைக்கு தான் நிம்மதியா இருக்கு எவ்வளவு ராகத்தா இருக்கு என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

------------------------------------------------------------------------------------------
நம்மில் பல பேர் இப்படி தான் இருக்கிறோம் நமக்கு கொடுக்க பட்ட அருளை பற்றி எண்ணுவதில்லை அதை விட பெரியதை பற்றியே சிந்திக்கிறோம் , நாம் இருப்பதை விட கீழ் நிலைக்கு செல்லும் போது தான் நாம் இருந்த நிலையின் அருமையை உணர்கிறோம்.

அது போல் நமக்கு வரும் எந்த துன்பமும் நிலையானது அல்ல

" நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது."

இறைவேதம் ( அத்தியாயம் 94: வசனம் 5)

கல்வி

அன்று - எழுத்தறிவித்தவன் ஆசிரியர்
இன்று -  எழுத்தையும் அறிவையும் விற்றவன் ஆசிரியர்
சேவையாக இருந்த கல்வி இன்று வியாபாரமாக ஆகிவிட்டது 
-அபு முஜாஹித் 

ஜும்மா மேடை

நான் கண்ட பெரும்பான்மையான ஜூம்மாகளில் இமாம் தர்ம சிந்தனை பற்றி இஸ்லாம் கூறும் கூற்றை பேசி முடிந்த பிறகு தொழுகைக்கு பின் நிர்வாக தலைவர் எழுந்து அமைப்பின் தேவைகளையும் பள்ளியின் தேவைகளையும் மக்களிடையே கேட்பார் .
ஆனால் அதே ஜூம்மாகளில் கலிபா உமரின் ஆட்சியை பற்றியும் ஏனைய இஸ்லாமிய ஆட்சியரை பற்றியும் பேசி முடிந்த பிறகு எந்த நிரவாகியும் எழுந்து எனது நிர்வாகத்தில் குறை இருந்தால் சொல்லுங்கள் என்று என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை

கடன்



மேலே சொன்ன உரையாடல் மாதிரி தான் இன்றைய நிலைமை ஆகி போச்சு . கடன் வாங்கும் போது இருக்கும் அடக்கமும் கண்ணியமும் இருக்க நம்ம ஆளுககிட்ட கடன் வாங்கிய பிறகு அடக்கம் கண்ணியம் எல்லாம் முற்றிலுமாக அடங்கியே போய் விடுகிறது .
நாம பண்ணினா வேலைக்கு கிளைன்ட்க்கு கால் பண்ணி கேட்ட நாளைக்கு வா இன்னைக்கு வா என்று இழுத்து அடிப்பது .போன் பில் பாக்கி வச்சிட்டு நாம என்னமோ கம்பெனி காரன் கடன் கேட்க போன் போட்ட மாதிரி நான் இப்பம் மீட்டிங்கல இருக்கேன் அப்பறம் பண்ணுங்க ன்னு இழுத்து அடிப்பது . இந்த காலத்துலலாம் கடன் வாங்கினவன் தான் சொகுசா இருக்கான் கடன் கொடுத்தவன் கொய்யோ மொய்யோ ன்னு அவன் பின்னாடி நாய் மாதிரி அலைய வேண்டி இருக்கு.
ஒரு முறை நபிகள் நாயகத்திடம் ஒரு தோழர் கடனுக்கு கொடுத்த ஒட்டகத்தை கேட்டு வந்தார் . அப்போது நபிகள் நாயகம் அவரிடம் வாங்கிய ஒட்டகத்தை விட பெரிய மற்றும் சிறந்த ஒட்டகத்தை கொடுத்தார்கள் . அதை வாங்கிய தோழர் இறைவனிடம் பிரார்த்தித்தார் இறைவா என்னிடம் இவர் எப்படி நடந்து கொண்டாரோ அது போல இவருடைய விசயத்தில் நீயும் நல்ல முறையில் நடந்து கொள் என்று .
அப்போது கூடி இருந்த மக்களை பார்த்து சொன்னார்கள் உங்களில் சிறந்தவர் யார் தெரியுமா? உங்களுடைய கடனை அழகிய முறையில் திருப்பி செலுத்துபவர் என்று .
ஆம் நம்மில் அழகு என்பது கோட் சூட் போட்டு டை கெட்டி கொண்டு பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடனை திருப்பி கொடுக்காதவர் அல்லர். மாறாக சிறிய கடனை வாங்கினாலும் அதை கண்ணியமான முறையில் திருப்பி கொடுப்பவரே .
உங்களில் யாரவது இப்படி இருந்த இன்னைக்கே மாத்திகிருங்க .

அன்னை மேரி (அலை) உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட மேன்மையானவர்

அன்னை மேரி (அலை) உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட மேன்மையானவர்: -
(நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள் (Angels); மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்’ (என்று கூறினர்) (அல்-குர்ஆன் 3:42)
ஆண் துணையின்றி குழந்தை இயேசுவை பெற்றெடுத்த அற்புத அன்னை மேரி (அலை): -
மலக்குகள் கூறினார்கள்; ‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
‘மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.’
(அச்சமயம் மர்யம்) கூறினார்: ‘என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும் போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?’ (அதற்கு) அவன் கூறினான்: ‘அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ‘ஆகுக’ எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.’
இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான். (அல்-குர்ஆன் 3:45-48)
இயேசு நாதர் (அலை) அவர்கள் செய்த அற்புதங்கள்: -
இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) ‘நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது’ (என்று கூறினார்). (அல்-குர்ஆன் 3:49)
அப்பொழுது அல்லாஹ் கூறுவான்: ‘மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், ‘இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை’ என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும். (அல்-குர்ஆன் 5:110)
இயேசு நாதர் (அலை) அனுப்பப்பட்டதன் நோக்கம்: -
இயேசு நாதர் (அலை) இஸ்ரவேலர்களைப் பார்த்துக் கூறினார்: -
‘எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.’
‘நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.’ (அல்-குர்ஆன் 3:50-51)
இயேசு நாதர் (அலை) அவர்களின் சீடர்கள் அல்லாஹ்வை ஈமான் கொண்ட முஸ்லிம்களாவார்கள்: -
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: ‘அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?’ என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: ‘நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்’ எனக் கூறினர்.
‘எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!’ (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) (அல்-குர்ஆன் 3:52-53)
தோராவையும் இன்ஜீலையும் வழங்கியவன் அல்லாஹ்வே!
இறைவன் கூறுகிறான்: -
நிச்சயமாக நாம் தாம் ‘தவ்ராத்’தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் – அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.
அவர்களுக்கு நாம் அதில், ‘உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;’ எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (அல்-குர்ஆன் 5:44-46)
இயேசு நாதர் (அலை) அவர்கள் கொல்லப்படவும் இல்லை, சிலுவையில் அறையப்படவும் இல்லை அல்லாஹ் அவரை உயர்த்திக் கொண்டான்: -
இறைவன் கூறுகிறான்: -
(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
‘ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்’ என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! (அல்-குர்ஆன் 3:54-55)
மேலும் அவர்கள் தம் நிராகரிப்பி(ல் எல்லை மீறிவிட்டத)னாலும் மர்யம் மீது பெரியதொரு அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா – மஸீஹை நாங்கள் தாம் கொன்றோம். என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). – உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை, அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாக ஆக்கப்பட்டு விட்டது. மேலும், எவர்கள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை. நிச்சயமாக அவர்கள் அவரை – மஸீஹை – கொலை செய்யவேயில்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:157-158)
அன்னை மேரியின் (அலை) மகன் இயேசு நாதர் (அலை) அல்லாஹ்வின் அடியரே அன்றி வேறில்லை: -
அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (அல்-குர்ஆன் 43:59)
இயேசு நாதர் (அலை) அவர்கள் திரும்பவும் இவ்வுலகிற்கு வருவார்கள்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெரும்) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகி விடும்.
இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூ ஹுரைரா(ரலி), வேதம் அருளப்பட்டவர்களில் யாரும் அவர் (ஈஸா) மரணமாவதற்கு முன்னால் அவர் மீது நம்பிக்கை கொள்ளாமலிருக்க மாட்டார்கள். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கு எதிராக அவர் சாட்சி சொல்பவராய் இருப்பார்’ (திருக்குர்ஆன் 04:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். ஆதாரம்: பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3448
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
எனக்கும் அவருக்கும் இடையில் வேறு எந்த நபியும் இல்லை; அதாவது ஈஸா (அலை) அவர் (வானத்திலிருந்து பூமிக்கு) இறங்குவார். அவரை நீங்கள் பார்க்கும் போது நீங்கள் (அவர் தான் ஈஸா {அலை} என) உணர்ந்து கொள்வீர்கள். (அவர்) நடுத்தர உயரத்திலும், செந்நிறமுடையவராகவும், இரண்டு இலேசான மஞ்சள் நிறமுள்ள ஆடையணிந்தவராகவும், ஈரமில்லாமல் இருப்பினும் நெற்றியிலிருந்து (வியர்வைத்) துளிகள் வழிவதைப்போன்றும் (காணப்படுவார்). அவர் இஸ்லாத்திற்காக மக்களிடையே போரிடுவார். சிலுவையை உடைத்தெறிவார்; பன்றிகளைக் கொல்லூர்; ஜிஸ்யா (என்னும் வரியை) நீக்குவார். அல்லாஹ் இஸ்லாத்தைத் தவிர அனைத்து மார்க்கங்களையும் அழித்து விடுவான். அவர் தஜ்ஜாலைக் கொல்லுவார்; இந்த உலகத்தில் நாற்பது வருடங்கள் வாழ்ந்து பின்னர் மரணமடைவார். முஸ்லிம்கள் அவருக்கு தொழுவிப்பார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: ஸூனன் அபூதாவுத்.
நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனுக்கும் இயேசு நாதருக்கும் (அலை) நடக்கவிருக்கும் உரையாடல்: -
‘இன்னும் ‘மர்யமுடைய மகன் ஈஸாவே ‘அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது அவர் ‘நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய் என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார்’
{மேலும் ஈஸா (அலை) கூறுவார்} ‘நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ‘என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன் அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும் கூறுவார்.)’ (அல் குர்ஆன் 5:116-117)

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

ரத யாத்திரை


தனி கவுண்டர்

 தமிழ் இந்து (24-3-18) 

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

இலவசமா கொடுக்க இது என்ன கவர்மென்ட் (அரசாங்க) சொத்தா ?

சாதாரணமா நாம தனியார் பள்ளிகூடத்தில்  ஒரு புத்தகத்துக்கு  ஏன்ப்பா இவ்வளவு காசு வாங்கிரனு  கேட்டா அவன் சொல்லுவான் freeயா கொடுக்க இது என்ன கவர்மென்ட் ஸ்கூலான்னு ?  

எங்கயாவது  தனியார் ஆஸ்பத்திரியில வெறும்    மாத்திரைக்கு இவ்வளவு  காசா  என்று கேட்டா அவன் சொல்லுவான்   freeயா கொடுக்க இது என்ன கவர்மென்ட் ஆஸ்பத்திரியா ?

கடையில்  என்னப்பா கோதுமை இவ்வளவு விலை சொல்ற என்று கேட்டா
அவன் சொல்லுவான் வேணும்னா வாங்கிக்கோ இல்லன்னா கவர்மென்ட் ரேஷன்  கடைல  போய்  வாங்கிக்கோ 


இப்படி அன்றாடம்  நம் வாழ்கையில் பல சம்பவங்களை பார்கலாம்.

மொத்தத்தில் இலவசம், சலுகை என்றாலே அது அரசாங்கத்தால் மட்டுமே தர முடியும் என்ற ஒரு விதி எல்லாருடைய  பொது புத்தியிலும் பதிந்து உள்ளது .அது தான் ஒரு உண்மை அரசாங்கத்தின் பணியும் கூட ...

தற்போது  நாட்டின் நிலைமை என்னவாக இருக்கிறது ?

இலவசமாக  கொடுக்க வேண்டிய அரசாங்கம்  நம்மிடமிருந்து  காசை பிடுங்குகிறது . அதிகமாக வாங்க வேண்டிய தனியார் நமக்கு சலுகை தருகிறது.

என் அனுபவத்தில் இருந்தே இதற்க்கு ஒரு உதாரணம் சொல்ல முடியும். என்னிடம் கடன் வாங்கின நபர் எனக்கு அந்த பணத்தை சென்னையில் தேனாம்பேட்டையில்  இருந்து எனது SBI வங்கிக்கு வைப்பு (Deposit) செய்கிறார் என்னுடைய கணக்கில் இருந்து அதற்காக 25ரூபாய் எடுக்கபடுகிறது வேறு  கிளை  என்பதால் ( என்னுடையது ஆயிரம் விளக்கு கிளை ).

இதே பணத்தை தனியார் வங்கி மூலம் பரிவர்த்தனை செய்தால் இலவசம்.



சமீபத்தில் நடந்த இரண்டு  சம்பவங்கள்


1. ஜியோ

சாதரணமாக  ஒரு ஜிபி நெட் பேக்  போடுவதற்கு ரூ250 செலவாகிறது . ஆனால் ஜியோ நெட் மற்றும் கால் அனைத்தையும் இலவசமாக தர வழங்குகிறது . இதில் மிக பெரிய கொடுமை என்னன்னா  இத்தகைய இலவசங்களையும் டிஜிட்டல் இந்தியாவின்  முகமாக செயல்படவேண்டிய  அரசாங்கத்தின் BSNL நிறுவனமோ அகல பாதாளத்தில் சென்று கொண்டு இருக்கிறது ஆனால் தனியார் நிறுவனமோ இதை டிஜிட்டல் இந்தியா புரட்சி என்கிறது பிரதமரின் படத்துடன் ...
உண்மையில் இது டிஜிட்டல் இந்தியா அல்ல இது Digital India (Pvt ltd).


2.PayTm

அரசாங்கம் நவம்பர் 8 ஆம் தேதி  நள்ளிரவு முதல் 500ரூபாய்  1000 நோட்டுகள் செல்லாது என்கிறது .

நவம்பர் 9 ஆம் தேதி அனைத்து செய்திதாள்களிலும் PAYTM விளம்பரம் முழு பக்கத்திற்கு பிரதமரின் படத்துடன் வருகிறது .

அதன் பின் அநேக கடைகளில் இங்கு PayTm Accepted Here என்ற லேபிள்களை பார்க்க முடிகிறது .



இதே அரசாங்கம் நினைத்தால் அரசுக்கு என்று ஒரு செயலியை (Application) உருவாக்கி PayTmற்கு நிகரான ஒரு சேவையை வழங்கி இருக்க முடியாதா? இல்லை அதற்கான பணம் தான் அரசாங்கத்திடம் இல்லையா ?

(சமீபத்தில் RTIயில் பெறப்பட்ட தகவலின் படி பிரமரின் ஒரு நாள் விளம்பர செலவு மட்டும் சுமார் 2 கோடி .)

cashless இந்தியா என்று நாடே கூவி கொண்டு இருக்கிறது ஆனால் இந்திய அரசு வழங்க வேண்டிய cashless இந்தியாவை சீனா செயலி வழங்கி கொண்டு இருக்கிறது .


இன்றளவும் அரசு ATM கள் பெரும்பாலும்  மூடி  இருக்கிறது தனியார் ATMகள் முன் மக்கள் அலை மோதுகிறார்கள் .

இவை எல்லாம் எதை காட்டுகிறது ?

 இவை நாடு கொஞ்சம்  கொஞ்சமாக அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்த்து கொண்டிருப்பதை காட்டுகிறது.

இன்னும் கொஞ்ச நாளில் அனைத்தும் தனியாரின் கட்டுபாட்டில் வந்து விடும் அவர்களே நாட்டின்  அனைத்தையும் நிர்ணயிக்க கூடிய சக்தியாக இருப்பார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை .



சனி, 11 அக்டோபர், 2014

மாச கடைசி


மாசம் முதல்ல எவன் கை நெறைய சம்பளம் வாங்குறான் என்பது முக்கியமல்ல மாச கடைசில எவன் கைல காசு இருக்குது என்பது தான் முக்கியம்.

பரகத் என்பது 50000 சம்பளம் வாங்கி மாச கடைசில கைல 500 ரூபாய் வைத்து இருப்பது அல்ல மாறாக 10000 சம்பளமே வாங்கினாலும் மாச கடைசில கைல 1000 ரூபாய் வைத்து இருப்பது தான் .
அல்ஹம்துலில்லாஹ் !
‪#‎மாச_கடைசி‬ ‪#‎பரகத்‬

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

மேஸ்திரியும் மேலாளரும்





கட்டிட வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்த அந்த கட்டடத்தில் மேலாளர் ஐந்தாம்  மாடியிலும் மேஸ்திரி முதலாம் மாடியிலும் பணி புரிந்து கொண்டு இருந்தார்கள் .

மேலாளர் மேஸ்திரியை அழைக்க நாடினார்  ஆனால் அங்குள்ள இரைச்சலின் காரணமாக மேஸ்திரியின் காதில் அவரது அழைப்பு விழவில்லை பின் மேஸ்திரியின் கவனத்தை தன் பக்கம் திருப்ப மேலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை போட்டார் மேஸ்திரி அதை எடுத்து விட்டு மீண்டும் வேலையை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் பின் மேலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை போட்டார் அதையும் எடுத்து விட்டு தன் பணியை தொடர ஆரம்பித்துவிட்டார் . பின் கடைசியாக மேலாளர் மேலிருந்து ஒரு கல்லை போட்டார் உடனே அது மேஸ்திரியின் மேல் விழுந்து அவருடைய கவனத்தை மேலாளர் பக்கம் திருப்பியது.

இதுவே நம் வாழ்க்கை , இறைவன் தன்னை நினைவு கூறுவதற்கு சிறு நன்மைகளையும் பெரும் நன்மைகளையும் நமக்கு அருள் புரிகிறான். உலக வேலையில் நாம் அதை பெற்று கொண்டு விட்டு கண்டும் காணமால் மீண்டும் நாம் உலக வாழ்க்கையின் பிஸியாக ஆகிவிடுகிறோம்.

பின் நமக்கு ஒரு துன்பம் ஏற்படும் போது இறைவனை தொடர்பு கொள்கிறோம்.


இதையே இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்

"மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன. "

( அல்-குர்ஆன் 10:12)

 
Copyright © 2014 ஏர்வை ஹசன்