பதிவுகள்

சித்திரங்கள்

தத்துவங்கள்

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

மேஸ்திரியும் மேலாளரும்





கட்டிட வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்த அந்த கட்டடத்தில் மேலாளர் ஐந்தாம்  மாடியிலும் மேஸ்திரி முதலாம் மாடியிலும் பணி புரிந்து கொண்டு இருந்தார்கள் .

மேலாளர் மேஸ்திரியை அழைக்க நாடினார்  ஆனால் அங்குள்ள இரைச்சலின் காரணமாக மேஸ்திரியின் காதில் அவரது அழைப்பு விழவில்லை பின் மேஸ்திரியின் கவனத்தை தன் பக்கம் திருப்ப மேலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை போட்டார் மேஸ்திரி அதை எடுத்து விட்டு மீண்டும் வேலையை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் பின் மேலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை போட்டார் அதையும் எடுத்து விட்டு தன் பணியை தொடர ஆரம்பித்துவிட்டார் . பின் கடைசியாக மேலாளர் மேலிருந்து ஒரு கல்லை போட்டார் உடனே அது மேஸ்திரியின் மேல் விழுந்து அவருடைய கவனத்தை மேலாளர் பக்கம் திருப்பியது.

இதுவே நம் வாழ்க்கை , இறைவன் தன்னை நினைவு கூறுவதற்கு சிறு நன்மைகளையும் பெரும் நன்மைகளையும் நமக்கு அருள் புரிகிறான். உலக வேலையில் நாம் அதை பெற்று கொண்டு விட்டு கண்டும் காணமால் மீண்டும் நாம் உலக வாழ்க்கையின் பிஸியாக ஆகிவிடுகிறோம்.

பின் நமக்கு ஒரு துன்பம் ஏற்படும் போது இறைவனை தொடர்பு கொள்கிறோம்.


இதையே இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்

"மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன. "

( அல்-குர்ஆன் 10:12)

 
Copyright © 2014 ஏர்வை ஹசன்