பதிவுகள்

சித்திரங்கள்

தத்துவங்கள்

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

இலவசமா கொடுக்க இது என்ன கவர்மென்ட் (அரசாங்க) சொத்தா ?

சாதாரணமா நாம தனியார் பள்ளிகூடத்தில்  ஒரு புத்தகத்துக்கு  ஏன்ப்பா இவ்வளவு காசு வாங்கிரனு  கேட்டா அவன் சொல்லுவான் freeயா கொடுக்க இது என்ன கவர்மென்ட் ஸ்கூலான்னு ?  

எங்கயாவது  தனியார் ஆஸ்பத்திரியில வெறும்    மாத்திரைக்கு இவ்வளவு  காசா  என்று கேட்டா அவன் சொல்லுவான்   freeயா கொடுக்க இது என்ன கவர்மென்ட் ஆஸ்பத்திரியா ?

கடையில்  என்னப்பா கோதுமை இவ்வளவு விலை சொல்ற என்று கேட்டா
அவன் சொல்லுவான் வேணும்னா வாங்கிக்கோ இல்லன்னா கவர்மென்ட் ரேஷன்  கடைல  போய்  வாங்கிக்கோ 


இப்படி அன்றாடம்  நம் வாழ்கையில் பல சம்பவங்களை பார்கலாம்.

மொத்தத்தில் இலவசம், சலுகை என்றாலே அது அரசாங்கத்தால் மட்டுமே தர முடியும் என்ற ஒரு விதி எல்லாருடைய  பொது புத்தியிலும் பதிந்து உள்ளது .அது தான் ஒரு உண்மை அரசாங்கத்தின் பணியும் கூட ...

தற்போது  நாட்டின் நிலைமை என்னவாக இருக்கிறது ?

இலவசமாக  கொடுக்க வேண்டிய அரசாங்கம்  நம்மிடமிருந்து  காசை பிடுங்குகிறது . அதிகமாக வாங்க வேண்டிய தனியார் நமக்கு சலுகை தருகிறது.

என் அனுபவத்தில் இருந்தே இதற்க்கு ஒரு உதாரணம் சொல்ல முடியும். என்னிடம் கடன் வாங்கின நபர் எனக்கு அந்த பணத்தை சென்னையில் தேனாம்பேட்டையில்  இருந்து எனது SBI வங்கிக்கு வைப்பு (Deposit) செய்கிறார் என்னுடைய கணக்கில் இருந்து அதற்காக 25ரூபாய் எடுக்கபடுகிறது வேறு  கிளை  என்பதால் ( என்னுடையது ஆயிரம் விளக்கு கிளை ).

இதே பணத்தை தனியார் வங்கி மூலம் பரிவர்த்தனை செய்தால் இலவசம்.



சமீபத்தில் நடந்த இரண்டு  சம்பவங்கள்


1. ஜியோ

சாதரணமாக  ஒரு ஜிபி நெட் பேக்  போடுவதற்கு ரூ250 செலவாகிறது . ஆனால் ஜியோ நெட் மற்றும் கால் அனைத்தையும் இலவசமாக தர வழங்குகிறது . இதில் மிக பெரிய கொடுமை என்னன்னா  இத்தகைய இலவசங்களையும் டிஜிட்டல் இந்தியாவின்  முகமாக செயல்படவேண்டிய  அரசாங்கத்தின் BSNL நிறுவனமோ அகல பாதாளத்தில் சென்று கொண்டு இருக்கிறது ஆனால் தனியார் நிறுவனமோ இதை டிஜிட்டல் இந்தியா புரட்சி என்கிறது பிரதமரின் படத்துடன் ...
உண்மையில் இது டிஜிட்டல் இந்தியா அல்ல இது Digital India (Pvt ltd).


2.PayTm

அரசாங்கம் நவம்பர் 8 ஆம் தேதி  நள்ளிரவு முதல் 500ரூபாய்  1000 நோட்டுகள் செல்லாது என்கிறது .

நவம்பர் 9 ஆம் தேதி அனைத்து செய்திதாள்களிலும் PAYTM விளம்பரம் முழு பக்கத்திற்கு பிரதமரின் படத்துடன் வருகிறது .

அதன் பின் அநேக கடைகளில் இங்கு PayTm Accepted Here என்ற லேபிள்களை பார்க்க முடிகிறது .



இதே அரசாங்கம் நினைத்தால் அரசுக்கு என்று ஒரு செயலியை (Application) உருவாக்கி PayTmற்கு நிகரான ஒரு சேவையை வழங்கி இருக்க முடியாதா? இல்லை அதற்கான பணம் தான் அரசாங்கத்திடம் இல்லையா ?

(சமீபத்தில் RTIயில் பெறப்பட்ட தகவலின் படி பிரமரின் ஒரு நாள் விளம்பர செலவு மட்டும் சுமார் 2 கோடி .)

cashless இந்தியா என்று நாடே கூவி கொண்டு இருக்கிறது ஆனால் இந்திய அரசு வழங்க வேண்டிய cashless இந்தியாவை சீனா செயலி வழங்கி கொண்டு இருக்கிறது .


இன்றளவும் அரசு ATM கள் பெரும்பாலும்  மூடி  இருக்கிறது தனியார் ATMகள் முன் மக்கள் அலை மோதுகிறார்கள் .

இவை எல்லாம் எதை காட்டுகிறது ?

 இவை நாடு கொஞ்சம்  கொஞ்சமாக அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்த்து கொண்டிருப்பதை காட்டுகிறது.

இன்னும் கொஞ்ச நாளில் அனைத்தும் தனியாரின் கட்டுபாட்டில் வந்து விடும் அவர்களே நாட்டின்  அனைத்தையும் நிர்ணயிக்க கூடிய சக்தியாக இருப்பார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை .



 
Copyright © 2014 ஏர்வை ஹசன்