பதிவுகள்

சித்திரங்கள்

தத்துவங்கள்

செவ்வாய், 19 நவம்பர், 2013

பெண்ணுரிமை

தலைப்புக்கு போறதுக்கு முன்னாடி ஒரு நடந்த சம்பவத்தை உங்ககிட்ட பகிர்ந்து கொள்கிறேன் .

கனடா நாட்டில் ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். கணவன் மனைவிக்கு இடையில் சரியான understanding இல்லமால் வாழ்ந்து வந்தனர் .இதனிடையில் கணவன் ரகசியமாக தன் காதலியை சந்தித்து பழகி வந்தான். சிறிது காலம் போக போக மனைவிக்கு சந்தேகம் வலுத்தது. ஏஜென்ட் மூலம் துப்பறிந்து விசயத்தையும் கண்டுபிடித்துவிட்டாள்.

கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டு மனைவி பின் தொடர்ந்து போய் போலீஸ்க்கும் தகவல் கொடுத்தால் அடுத்த நிமிடமே போலீஸ் வீட்டை சுற்றி வளைத்தது .உள்ளிருந்த கணவனுக்கு பயம் பற்றி கொண்டது காதலி கூலாக சொன்னாள் நீ எதற்கும் கவலைபடாதே நான் பார்த்து கொள்கிறேன் என்று .

கதவை திறந்த உடன் காவலாளி சொன்னார் "யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட்" உங்கள் மனைவி உங்கள் மீது புகார் தெரிவித்து உள்ளார் நீங்கள் இன்னொரு பெண்ணை மணந்ததாக என்று .காதலி கூலாக தன் ID கார்டுஐ (விபச்சாரம் செய்வதற்குரிய ID card) எடுத்து காட்டி சொன்னால் "He is my customer " என்று . வந்த போலீஸ் சொன்னார்கள் சாரி மேடம் , enjoy your Day என்று .

சரி அந்த ஊரில் தான் அப்படி என்றால் நம் நாட்டிலும் சட்டம் அப்படி தான் , ஒருவன் யாரோட வேண்டும் என்றாலும் உறவு கொள்ளலாம் ஆனால் முறையாக திருமணம் செய்தால் சட்டப்படி அவரை கைது செய்யலாம் .

என்றாவது நீங்கள் வாசிக்கும் செய்திதாளை படித்தது உண்டா வேறு பெண்ணுடன் விபச்சாரம் செய்த கணவர் மீது புகார் கணவன் ஜெயிலில் அடைப்பு என்று ? ஆனால் நீங்கள் பார்க்கலாம் இரண்டாம் திருமணம் செய்தவர் கைது என்று .மொத்தத்தில் பெண்களை use and through மாதிரி உபயோகபடுத்தி கொள்ளலாம் என்ற சித்தாந்தமே மேலோங்குகிறது . அதன் விளைவு தான் விபச்சாரம் .

ஆனால் இஸ்லாம் சொல்கிறது நீங்கள் 4 திருமணங்கள் வரை முடிக்கலாம் என்று அதுவும் கண்டிசன் அடிப்படையில் . எல்லா மனைவிகிட்டேயும் சமமாக நடந்தால் மட்டுமே இல்லையேல் ஒன்றே உங்களுக்கு சிறந்தது என்று .இஸ்லாம் பெண்களை இதன் மூலம் விபச்சாரத்தின் பக்கம் தள்ளவில்லை . பெண்களை use and through கலாச்சாரத்தில் பார்க்காமல் அவர்களுக்குகாண முழு பொருட்ப்பையும் வழங்குகிறது .

என்னதான் இந்த நாட்டில் முதல்வர் பதவியிலே இருந்தாலும் இரண்டு மனைவி வைத்து இருந்தால் நாட்டின் சட்டப்படி அதிகாரபூர்வமாக மனைவி என்று சொல்ல முடியாது அதனால் தான் பத்திரிகையில் எழுதும் போது கூட மனைவி என்றும் துனைவி என்றும் பிரித்து எழுதுவதை நீங்கள் பார்க்கலாம் .

ஆனால் இஸ்லாம் மனைவி என்ற அந்தஸ்தை கொடுத்து அந்த பெண்ணுக்கு அதிகாரபூர்வமாக சொத்தில் பங்கு கிடைக்க செய்கிறது .

இந்த உலகம் ஆகுமானதை (திருமணம்) பாவமாகவும் விலக்கபட்டதை ( விபச்சாரம் ) ஆகுமானதவாகவும் கருதுகிறது .

மனிதனின் நிலையை உணர்ந்து எக்காலத்திற்கும் பொருந்த கூடிய இறைவனின் சட்டத்தை நினைத்து பெருமை கொள்கிறேன் .
 
Copyright © 2014 ஏர்வை ஹசன்