பதிவுகள்

சித்திரங்கள்

தத்துவங்கள்

புதன், 23 அக்டோபர், 2013

அமைதி மார்க்கம்

பல வகையான இன, மத மக்கள் வாழ கூடிய ஒரு நாட்டில் நானும் வாழ்கிறேன் . ஒவ்வொரு மதத்தவரும் தங்களது பண்டிகைகளை கொண்டாடும் போது அவர்கள் நடத்தும் ஊர்வலத்தையும் அதற்கான ஒரு பெரிய பாதுகாப்பையும் பார்க்க முடிகிறது.

இந்த நாட்டில் பெரும்பாலான கலவரங்கள் சில நூறு கணக்கில் கூடுகிற சாதி ,மத ஊர்வலங்களால் நடப்பதை பார்க்கிறேன் . ஆனால் லட்ச கணக்கில் முஸ்லிம்கள் கூடுகின்ற இரு பெருநாட்களிலும் , ஆயிர கணக்கில் முஸ்லிம்கள் கூடுகின்ற வெள்ளிகிழமைகளிலும் ஒரு சிறு அசம்பாவிதமோ மக்களுக்கு இடையூறு செய்ய கூடிய ஒரு காரியத்தையோ பார்க்க முடியவில்லை மாறாக அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி அன்பை வெளிபடுத்துவதையே பார்க்கிறேன் .

ஒரு சிலைக்கு இரண்டு பாதுகாவர்கள் இருந்து கூட நான் பார்த்ததுண்டு. ஆனால் ஆயிர கணக்கில் மக்கள் கூடும் வெள்ளிகிழமை அன்று மசூதியின் வாசலின் முன் ஒரு காவலரை கூட பார்த்தது இல்லை .

மதம் என்பது அமைதியை போதிக்க கூடியதாகவும் பிற சமுகத்திற்கு இடையூறு அளிக்கமாலும் இருக்க வேண்டும் . இப்படி பட்ட சூழ்நிலையை நான் இஸ்லாத்தில் பார்க்கிறேன் .
 
Copyright © 2014 ஏர்வை ஹசன்