பதிவுகள்

சித்திரங்கள்

தத்துவங்கள்

வெள்ளி, 25 ஜனவரி, 2013

வாய்மையுடன் வாய் சுத்தம்

அம்மா ஸ்ட்ராங்க ஒரு பெட் காபி . இன்றைய படித்த இளைஜனின் படுக்கை அறையில் இருந்து காலையில் கேட்கும் ஒரு ஓசை . இது தான் இன்றைய நாகரீகம் கற்று தந்தது .

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் " பல் துவக்குவது வாயை சுத்தப்படுத்துகிறது .இறைவனின் மகிழ்ச்சிக்கு காரணமாகிறது " (முஸ்னது அஹமத் 7)
இப்படி ஆர்வமூட்டினார்கள். ஆகவே தான்,


=> தூக்கத்தில் இருந்து எழுந்ததும் பல் துலக்கு குச்சியை தூகிவிடுவார்கள்(ஷஹீஹ் முஸ்லிம் 426)

=> வெளியே போய் வீடிற்குள் நுழைந்ததும் முதல் வேலையாக பல் துவக்குவதே அவர்களின் வழக்கமாக இருந்தது (ஷஹீஹ் முஸ்லிம் 424)

=> உயிர் பிரிய இருந்த கடைசி நிமிடங்களிலும் பல் துவக்கினார்கள் (ஷஹீஹ் புகாரி 4449)

ஆன்மிகத்தின் பெயரால் வருடக்கணக்கில் பல் துவக்காமல் வாயை துண்டுத்துனியால் பொத்தி கட்டிக்கொல்வோரை பார்த்திருப்பீர்கள்.
இவர்கள் உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்பதற்காக வாயிலுள்ள கிருமிகளை கொள்வதில்லை என்று சொல்கிறார்கள் .பல் துவக்காமல் அவைகளை வளர்த்து, அருகில் உள்ளோர்களை துன்புறுத்துகிறார்கள்'.

நபிகளாரின் தோழர்கள் சிலர்,சமைக்கப்படாத வெங்காயம்,பூண்டு,சீமைப்பூண்டு இவற்றை சாப்பிட்டார்கள் . அதற்க்கு நபி (ஸல் ) கூறினார்கள் " இவ்வாறு சாப்பிட்டு விட்டு நமது மஸ்ஜிதை நெருங்க வேண்டாம்.ஏனெனில்,மனிதர்கள் எதனால் தொல்லை அடைகிறார்களோ அதனால் வானவர்களும் தொல்லை அடைகிறார்கள்.(ஷஹீஹ் முஸ்லிம் 976)

சாப்பிட அனுமதிக்கப்பட்ட உணவாக இருந்தாலும்,அதன் துர்வாடையால் மனிதர்களுக்கு தொல்லை என்றால்,சபிட்டவர் வீட்டிலயே தொழட்டும் என்றார்கள் நபிகளார் (ஸல்).

கொஞ்சம் சிந்தியுங்கள். பீடி,சிகிரெட் குட்கா,பான்பராக் என்று ஈரக் கொலையில் புற்று நோயைக் கொண்டு வரும் அசுத்த வாயுடன் அலைவோருக்கு என்ன சட்டம்?இவர்கள் தங்களையும் நாசமாகி,மற்றவர்களையும் நாசப்படுதுகிரார்கள்.

பொதுவாக ஆன்மிகவாதிகள் வாய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறோம்.ஆனால் நபிகளார் (ஸல்) வாய்மைக்கும் மட்டும் அன்றி வாய் சுத்தத்திற்கும் முக்கியத்துவம் கொத்தார்கள்.

இன்றைய மருத்துவமும் பல்லுக்கும் இதய நோய்க்கும் உள்ள தொடர்பை சொல்கிறது அதுமட்டுமில்லாமல் பல் துலக்குவதற்கும், மறதி நோய்க்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

இந்தச் சுத்தத்தின் அருமை பெருமைகளை மெத்த படித்த பல் டாக்டர்கள் மேசுவதற்கு முன்பே நபிகளார் (ஸல்) இதில் அழகிய முன்மாதிரியை காட்டினார்கள் .
 
Copyright © 2014 ஏர்வை ஹசன்