பதிவுகள்

சித்திரங்கள்

தத்துவங்கள்

புதன், 10 ஏப்ரல், 2013

தலையை கவனியுங்கள்

எப்போதும்பரட்டைத்தலை ,குப்பென்று வீசும் வியர்வை வாடை இவைகளை மொத்த குத்தகைக்கு எடுத்தாற்போல் சுத்துவார்கள் கேட்டால்

"வெளித்தோற்றத்துல ஒன்னுமே இல்லைங்க.. மனசு சுத்தமா இருந்த அதுவே போதும் "

என்று தத்துவம் பேசுவார்கள்.

லிப்ட் ல இறங்கும் பொது கொஞ்சம் கண்ணாடிய பார்த்து தலை சீவிற கூடாது உடனே பக்கத்துல இருகிறவன் சொல்வான்மனசுல இவர்க்கு இன்னும் 18வயசுனு நினைப்பு ஒரு புள்ளைக்கு தகப்பான ஆகியாச்சு இன்னும் அலங்காரத்தை பாரேன் என்று விமர்சனம் பேசுவார்கள்

இந்த மனிதர்களை என்னவென்று சொல்ல?? இவர்களுக்கு மனிதர்களுடன் வாழ தெரியவில்லை .மனிதச் சுபாவங்களை புரிந்து ,தங்களையும் தங்கள் வாழ்க்கையையும் அழகுபடுதிக்கொள்ள தெரியவில்லை ..
இவர்களுக்கு அழகுணர்ச்சி மரத்து பொய்விட்டது .அதனால் அழகை விரும்ப தெரியவில்லை
அண்ணலார் நபிகள் நாயகம்(ஸல் ) அழகை விரும்பினார்கள் அதோடு அல்லாஹும் அதை விரும்புகிறான் என்றார்கள் .

அண்ணலார் (ஸல் ) மஸ்ஜிதில் இருந்த சமயம் .

பரட்டை தாடி தலைமுடியோடு வந்தார் ஒருவர்.

"சீர்படுத்தி வாருங்கள் " என்று அவரிடம் சாடை காட்டினார்கள் அண்ணலார் (ஸல் )

அவர் அப்படியே செய்துவிட்டு திரும்பி வந்தார் . தாடியும் தலையும் சீராக இருந்தது.இப்போது அண்ணலார் (ஸல் ) சொன்னார்கள்:

"ஒருவர் தலைவிரி கோலமாக ஷைத்தான் போல வருவதைவிட இது சிறந்ததல்லவா??"(முஆதா 1702)

ஷைத்தான் அலங்கோலமான தோற்றம் கொண்டவன் .நாம் அவனைப்போல் இருக்கக்கூடாது .அழகான தோற்றத்தில் இருக்கவேண்டும் .எண்ணெய் தேய்த்து தலைவாரி,தாடியை வாரி சீராக இருக்கவேண்டும். என்று நபி (நாயகம் (ஸல்)சொன்னார்கள் .
 
Copyright © 2014 ஏர்வை ஹசன்